News

திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான கற்கைநெறி அறிமுக விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

                       
                            

 ✍🏻 இர்ஷாத் இமாமுதீன்

லைப்பொண்ட் சமூக சேவை நிறுவனத்தின் ஏற்பாட்டில், திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான மூன்று மாத கால “இஸ்லாமிய கண்ணோட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய வழிகாட்டல்” கற்கைநெறியின் அறிமுக விழாவும், கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பந்தாவ மத்லகம ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்துடன் இணைந்து 2026 செப்டெம்பர் (20 ஆம் திகதி) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு, பொல்கஹவெல அல்-இர்பான் மத்திய கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.



இந்நிகழ்வில் கொலன்னாவ மஸ்ஜித் சம்மேளனத்தின் தலைவரும், HR நிறுவனத்தின் தலைவரும், லைஃப்பொண்ட் நிறுவனத்தின் Premarital Project திட்டத்தின் பொறுப்பாளருமான ஜனாப் முஹம்மத் ஜகீன் முஹம்மத் பெரோஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.



மேலும், லைஃப்பொண்ட் சமூக சேவை நிறுவனத்தின் பணிப்பாளரும், அகில இலங்கை அஹதிய்யா சம்மேளனத்தின் தலைவருமான அல்ஹாஜ் எம்.ஆர்.எம். ஸரூக், பந்தாவ மத்லகம ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் அல் ஹாஜ் எம்.ஏ.எச்.எம். பவாஸ் மற்றும் பந்தாவ பள்ளிவாசல் நிர்வாகச் சபையின் பொருளாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். ரிஹான் நளீமி ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.


இந்நிகழ்வில், லைஃப்பொண்ட் சமூக சேவை நிறுவனத்தின் கலைத்திட்ட வடிவமைப்பாளரும் கற்கைநெறி இணைப்பாளருமான அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத் மற்றும் நிறுவனத்தின் இயக்குநர் அஷ்ஷெய்க் முஹம்மத் பகீஹுத்தீன் ஆகியோர் பிரதான வளவாளர்களாகக் கலந்துகொண்டு திருமணத்திற்கு முன் பெற வேண்டிய அறிவு, குடும்ப வாழ்க்கைக்கான தயார்படுத்தல், கணவன்–மனைவி உறவு, குடும்பப் பொறுப்புகள் மற்றும் இஸ்லாமிய குடும்ப வாழ்வின் அடிப்படைகள் தொடர்பில் கருத்துரைகளை வழங்கினர்.


நிகழ்வை லைஃப்பொண்ட் சமூக சேவை நிறுவனத்தின் முகாமையாளர் ஐ.எம். இர்ஷாத் ஒருங்கிணைத்து நெறிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் பெற்றோர்கள், கற்கைநெறியில் இணைந்த மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என சுமார் 100 க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும், கனத்த மழைக்கு மத்தியிலும் இந்நிகழ்வில் பெருமளவானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

திருமண வாழ்வை எதிர்நோக்கும் இளைஞர், யுவதிகளுக்கு திருமணத்திற்கு முன்னரே இஸ்லாமிய வழிகாட்டல்களையும் குடும்ப வாழ்வுக்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, லைஃப்பொண்ட் சமூக சேவை நிறுவனத்தினால் நாடளாவிய ரீதியில் இத்தகைய கற்கைநெறிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button