மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் 14ஆவது
உலக முதியோர் தினம் – 2026

மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கம், 14ஆவது தடவையாக உலக முதியோர் தினத்தை, அக்டோபர் மாதம் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப.8.30 மணிக்கு, மடவளை மதீனா தேசிய பாடசாலையின், அஷ்ரஃப் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் நடாத்தவுள்ளது.
இவ்வைபவத்திற்குப் பிரதம அதிதியாக எமது ஊரைச்சேர்ந்த மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மகனான Dr.A.C.M.ஹனஸ் அவர்களும், கௌரவ அதிதியாக எமது ஊரைச்சேர்ந்த மர்ஹூம் அல்ஹாஜ் ரவூஃப் அவர்களின் மகன் அல்ஹாஜ் ரௌஷான் M.ரவூஃப் அவர்களும் விசேட அதிதியாக எமது ஊரைச்சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம சேவகர் ஜனாப்.M.S.M.யாசீன் அவர்களின் மகன் Dr.சாஜித் யாசீன் அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
அன்றைய தினத்தில்
* 2026ஆம் ஆண்டில், ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற 28 மாணவர்கள், பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கிப் பாராட்டப்படவுள்ளனர்.
* 2025ஆம் ஆண்டு GCE O/L பரீட்சையில் ஆங்கில பாடத்தில் A சித்தி பெற்று உயர்தரத்திற்கு தகுதி பெற்ற 28 மாணவர்களுக்கு, ஜலீல் டீச்சரின் நினைவுப்பரிசு வழங்கப்பட உள்ளது.
* தேர்ந்தெடுக்கப்பட்ட 25 முதியோர்கட்கு, ரூபா.6000/= பெறுமதியான போஷாக்கு உணவுப்பொதியும் வழங்கப்பட உள்ளது.
* நீண்டகாலம் சேவையாற்றி ஓய்வு பெற்று, 75வயதைப் பூர்த்தி செய்தவர்களுள் ஆசிரியரும் பத்திரிகை நிருபருமான கலாபூஷணம் ஜனாப்.J.M.ஹாபிஸ், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் அல்ஹாஜ் A.M.ஆரிஃபீன், ஓய்வு பெற்ற டிப்போ உதவி முகாமையாளர் ஜனாப் H.M.பாரூக், கலாபூஷணம் S.H.நிசார், சமூக சேவையாளர் அவர்களும் பாராட்டி கெளரவிக்கப்பட உள்ளனர்.
எனவே இவ்வைபவத்திற்குக் குறிப்பாக, எமது சங்கத்தின் சகல அங்கத்தவர்களையும், அங்கத்தவராவதற்கு தகுதி பெற்றவர்களையும், மடவளையிலுள்ள சகல சங்கங்கள், நிறுவனங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களையும், எமது சங்கத்திற்கு நிதியுதவியா சகல அன்பளிப்பாளர்களையும், ஆதரவாளர்களையும், பொதுவாக சகல மடவளைவாசிகளையும் அன்பாய் அழைக்கின்றோம்.
தகவல் A.L.A. ஜலீல்,
செயலாளர்.
Secretary
Madawala Senior Citizens’ Association
13/5 Peradeniya, Madawala Bazaar
Sri Lanka
Our Mission – To serve the society, build a happy and healthy mentality



