News

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை பிணையில் விடுவிப்பதற்காக லஞ்சம் கோரியதாக குற்றம் சாட்டப்பட்ட மல்வத்துஹிர்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


கடந்த 26 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை மறுநாள் பிணையில் விடுவிப்பதற்காக, குறித்த பொலிஸ் சார்ஜன்ட் நபர் ஒருவரிடம் லஞ்சம் கோரும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.


சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் குறித்த அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக ஆரம்பகட்ட விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button