News

மதத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி பௌத்த மதத்தை இழிவுபடுத்திய இளைஞர் விளக்கமறியலில்..

தம்புள்ளை விகாரை உள்ளிட்ட பல புனிதத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகளை உள்ளடக்கிய பதிவுகளை சமூக ஊடகங்களில் பிரசாரஞ்ச செய்தமை மற்றும் புத்த பெருமானின் புகைப்படங்களை விகாரப்படுத்தி வாட்ஸ்அப் (WhatsApp) சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் எனக் கூறப்படும் இளைஞரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரமக  உத்தரவிட்டார்.


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய ஏ.எம். அமோத்ய மதீஷ என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


தம்புள்ளை விகாரையின் விகாராதிபதி கலாநிதி தானியகம ஆனந்த தேரர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு, சந்தேகநபரைக்க கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.


2026 நவெம்பர் 19 ஆம் திகதி தம்புள்ளை விகாரை, ஸ்ரீ தலதா மாளிகை, தூபாராமய, ஸ்ரீ மகா போதி உள்ளிட்ட பல புனிதத் தலங்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கும் பௌத்த மதத்தை முழு உலகிலிருந்தும் அழித்தொழிக்கும் வகையிலான கருத்துகளைச் சந்தேகநபர் வாட்ஸ்அப் குழுக்களில் பிரசாரஞ்ச செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலும் தெரிவித்தனர்.


சந்தேகநபரால் சமூக ஊடகங்களில் பிரசாரஞ்ச செய்யப்பட்ட பதிவுகள் அடங்கிய புகைப்படங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.


சந்தேகநபர் குறித்த சமூக ஊடகக் குழுக்களை நிர்வகித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button