News

Uk ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இலங்கையருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது

மாஞ்செஸ்டர் நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், 39 வயதான இலங்கை ஆண் ஒருவருக்கு பிரித்தானியாவில் எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


பிரித்தானிய ஊடக அறிக்கைகளின்படி, ஸ்டோக்-ஆன்-ட்ரெண்டில் (Stoke-on-Trent) இருந்து மாஞ்செஸ்டர் நோக்கி ரயில் பயணம் செய்தபோதே இச்சம்பவம் நடந்துள்ளது.
அப்பெண்ணின் அருகில் வந்து அமர்ந்த அவ்வாண், தனது ஆடையை விலக்கி பாலியல் ரீதியிலான செயலில் ஈடுபட்டுள்ளார்.

அவர் தன்மீது கைவைத்த பின்னரே நடப்பதை உணர்ந்த அப்பெண், அவரை உடனடியாக நிறுத்துமாறு கூறியதாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து பிரித்தானிய போக்குவரத்து பொலிஸாரால் (British Transport Police) கைது செய்யப்பட்ட அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.


மாஞ்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் (Manchester Crown Court) நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர், அவருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிறைத்தண்டனையுடன் சேர்த்து, அவருக்கு 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் பாலியல் தீங்கு தடுப்பு உத்தரவும் (Sexual Harm Prevention Order) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது தனக்குத் தெரியாத பெண்களுக்கு அருகில் அவர் அமர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் 10 ஆண்டுகளுக்கு பாலியல் குற்றவாளிகள் பதிவுப் பட்டியலின் கண்காணிப்பின் கீழும் வைக்கப்படுவார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button