போதைப் பொருள் வியாபாரம் செய்து ஏராளமான சொத்து சேர்ப்பு – ஆண் மற்றும் பெண்ணுக்கு சொந்தமான 44.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஆகியோருக்குச் சொந்தமான 44.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
இந்த இருவரும் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் இந்தச் சொத்துக்களை வாங்கியதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு இந்த விசாரணையைத் தொடங்கியது.
இந்தச் சொத்துக்களில், குறித்த பெண்மணியின் பெயரில் வாங்கப்பட்ட கட்டுநேரிய பிரதேசத்தில் உள்ள சுமார் 9.5 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய 24.8 பேர்ச் காணித் துண்டும், அதில் கட்டப்பட்டுள்ள சுமார் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய இரண்டு மாடி வீடும் அடங்கும்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தச் சொத்துக்கள் 14 நாட்களுக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு இது தொடர்பான மேல் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.



