News

ஈரான் கப்பல் விவகாரம் : நாட்டிற்கு பாதகமான எந்தவொரு தீர்மானத்தையும் அரசு எடுக்காது ; நளிந்த

‘நாட்டிற்கு பாதகமான எந்தவொரு தீர்மானத்தையும் அரசு எடுக்காது’ என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு அண்மித்த கடல் பரப்பில் நங்கூரமிட்டுள்ள ஈரான் கப்பல்களுக்கு உதவி அளிப்பது தொடர்பில் வினவப்பட்ட போது கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.

குறித்த கப்பல்கள் இலங்கை கடல் எல்லைக்கு அப்பால் இருப்பதாக கூறிய அவர் தற்போது வெளிநாட்டு அமைச்சு இதுவிடயமாக கலந்துரையாடி வருவதாகவும் நாட்டிற்கு பாதகமான எந்தவொரு தீர்மானத்தையும் அரசு எடுக்காது’ என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் அனுமதியின்றி பயணிக்கும் அமெரிக்கத் தடைகளுக்குட்பட்ட கப்பல்களுக்கு இலங்கை ஏதேனும் சேவைகளையோ அல்லது விநியோகங்களையோ வழங்கினால், இலங்கைக்கு தடைகள் விதிக்கப்படக்கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளதா என்பது குறித்து கேள்வி எழுப்பப்படும் நிலையில் இந்த கருத்தை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

Recent Articles

Back to top button