News

சிறைச்சாலைக்குள் ஞானசார தேரரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு நீதவான் உத்தரவு !

ஞானசார தேரரின் பாதுகாப்பு தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தாக . ஞானசார தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக ஞானசார தேரரின் பாதுகாப்பு தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிடியாணைக்காக அக்டோபர் 6 ஆம் திகதியும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிடியாணைக்காக அக்டோபர் 7 ஆம் திகதியும் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது. 

Recent Articles

Back to top button