News
நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் 27ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் 27ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களைப் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்த சம்பவத்தில் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரிலே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



