News

முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு..

முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு (PSTB)’ எதிராக உயர்நீதிமன்றத்தில் விஷேட நிர்ணய வழக்கொன்றை பதிவு செய்தது சமூக நீதிக்கட்சியின் சட்டத்தரணிகள் அமைப்பு!
••••••••••••••••••••••••••••••••••••

1979 ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்ட ‘பயங்கரவாத தடுப்புச் சட்டமானது (PTA)’ பின்னர் நிரந்தர சட்டமாக மாற்றப்பட்டு தற்போது வரை அமுலில் இருக்கின்றது. பயங்கரவாதத்தை தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட குறித்த சட்டமானது, பல்வேறு அடிப்படை உரிமைகளை மீறும் சட்ட ஏற்பாடுகளைக் கொண்டுள்ளதுடன், வரலாறு நெடுகிலும் மக்கள் விடுதலை முன்னணி அரசியல் செயற்பாட்டாளர்கள் உட்பட பல்வேறு சமூக, அரசியல் செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்காகவே பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்களை சேர்ந்த பலர் அநியாயமாக இந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்தது. தேசிய மக்கள் சக்தி இந்தக் கோரிக்கையை கருத்தில்கொண்டு, தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்தது.

இந்நிலையில் அரசாங்கமானது தற்போது அமுலில் இருக்கும் ‘பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை (PTA) நீக்கி’ அதற்குப் பதிலாக ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதியதொரு சட்டமூலமொன்றினை (PSTB)’ முன்மொழிந்திருக்கிறது.

இப் புதிய சட்டமூலத்தின் பல பிரிவுகள், அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இருப்பதனாலும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை (PTA) நீக்கும் நோக்கத்தினை நிறைவு செய்யாததனாலும் இதனை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் சமூக நீதிக்கட்சியின் சட்டத்தரணிகள் அமைப்பானது, சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் உயர்நீதிமன்றத்தில் விஷேட நிர்ணய வழக்கொன்றை பதிவு செய்துள்ளது. 

இவ்வழக்கானது வருகின்ற செவ்வாய்க்கிழமை (20.10.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button