News
இலங்கையின் நான்கு மண்டலங்களில் ஒரு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு NSO கோரிக்கை
இன்று (19) முதல் மூன்று நாட்களுக்கு இலங்கையின் நான்கு மண்டலங்களில் ஒரு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு தேசிய மின் கட்டமைப்பு இய்க்குநர் (NSO), இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையத்திற்கும் (PUCSL) எரிசக்தி அமைச்சகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய மின் கட்டமைப்பு இய்க்குநர் (NSO) தலைமை நிர்வாக அதிகாரியின் கூற்றுப்படி, இந்த மூன்று நாட்களுக்கு உட்பட்ட காலத்தில் மாலை 4:30 மணிக்கும் இரவு 8:30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



