News
நுரைச்சோலை லக்விஜய மின் நிலையம் செயலிழந்ததைத் தொடர்ந்து ஒரு மணி நேர மின்வெட்டுக்கு PUCSL அனுமதி
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் (PUCSL), லக்விஜய மின் நிலையம் (Lakvijaya Power Station) செயற்பாட்டில் இல்லாததால் உற்றப்த்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய முறைமை இயக்குநரகம் (NSO) மின் பற்றாக்குறையைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், இன்றிலிருந்து (19) ஒரு மணி நேர மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அட்டவணையின்படி, மாலை நேர உச்ச மின் நுகர்வு நேரத்தில் நான்கு குழுக்களாக மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும். அதன்படி மாலை 4:30 மணிக்கும் இரவு 8:30 மணிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த மின்வெட்டு திட்டமிடப்பட்டுள்ளது.



