News
🔹 ஜி.எல். பீரிஸ் வாக்குமூலம் 🔸

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று (20) ஆஜராகியுள்ளார்.
ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.
அவர் வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்று தொடர்பான விசாரணை குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காகவே ஆஜராகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது



