News
சவூதி அரேபியாவின் தம்மாம் சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் – ஒருவர் உயிரிழந்து, 8 பேர் காயம்

சவூதி அரேபியாவின் தம்மாம் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியம், ஜோர்தான், கட்டார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பணியாளர்களின் குடும்பத்தினரும் வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் உத்தரவிடப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



