News
சவூதியின் கிங் ஃபஹ்த் சர்வதேச விமான நிலையத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலி: 8 பேருக்கு காயம்
To சவூதி அரேபியாவின் தம்மாம் நகரில் அமைந்துள்ள கிங் ஃபஹ்த் சர்வதேச விமான நிலையத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
சவூதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இதனை அறிவித்துள்ளதாக ‘அல் ஜசீரா’ செய்தி சேவை தெரிவித்துள்ளது.
குறித்த ஆணையம் தனது X சமூக வலைத்தளக் கணக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தாக்குதலில் விமான நிலையத்திற்குச் சொத்துச் சேதங்களும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேதங்கள் குறித்த மதிப்பீடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இத்தாக்குமை தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.



