தடுத்து வைக்கப்பட்டுள்ள அல் குர்ஆன் பிரதிகளை விடுவிக்குமாறு மனித உரிமை ஆணைக்குழு புத்தசாசன அமைச்சுக்கு உத்தரவு !
தடுத்து வைக்கப்பட்டுள்ள அல் குர்ஆன் பிரதிகளை விடுவிக்குமாறு மனித உரிமை ஆணைக்குழு புத்தசாசன அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுசுக்கு உறுதிப்படுத்தின.
முஸ்லிம் சட்டத்தரணிகள் தரப்பு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பலனாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சிடன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணகளை அடுத்து குறித்த குரான் பிரதிகள் இறக்குமதி செய்யப்பட்டதில் எவ்வித தவறும் இடம்பெறவில்லை என்பதை இணங்கண்டதை அடுத்து புத்தசாசன அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுசுக்கு உறுதிப்படுத்தின.
மேலும் புத்தசாசன அமைச்சு அல் குரான் பிரதிகளை விடுவிக்க சுங்கத்திணைக்களத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் விரைவில் அல் குரான் பிரதிகள் விடுவிக்கப்படும் என கூறப்பட்டது.


