News
பேருந்து ரயிலுடன் மோதி விபத்து
ஹபராதுவவில் உள்ள ரயில் கடவையில், இன்று பிற்பகல் (25) பேருந்து ஒன்று ரயிலுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் குறைந்தது ஆறு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் மூவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பெலிஅத்த இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே சாரதியின்
கவனயீனம் காரணமாக இந்த பேருந்து மோதுண்டு உள்ளது.
கொக்கலாவில் உள்ள மார்ட்டின் விக்ரமசிங்க நாட்டுப்புற அருங்காட்சியகத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.



