ஓடுபாதையில் மேலே எழும்பத் தயாரான ஶ்ரீ லங்கன் விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது !

கட்டுநாயக்க பந்தாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்தின் இலண்டன் நகருக்குப் பறக்கத் தயாரான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்றின் எஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அதன் புறப்பாடு அவசரமாக நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத் தகவல்களை வெளியிடும் ‘ஏவியேஷன் வாய்ஸ்’ (Aviation Voice) செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான, 4R-ALR இலக்கத்தைக் கொண்ட ஏர்பபஸ் A330-300 (Airbus A330-300) வகையைச் சேர்ந்த UL503 விமானம், ஓடுபாதையில் மேலே எழும்பத் தயாரான போதே அதன் 02 ஆம் இலக்க எஞ்சினில் இந்த திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன்போது உடனடியாகச் செயற்பட்ட விமான ஓட்டிகள், அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்த விமானத்தின் புறப்பாட்டை உடնடியாக நிறுத்தி, அதனைப் பாதுகாப்பாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
அவசரத் தரிகை (பிரேக்) பயன்படுத்தப்பட்டதன் காரணமாக விமானத்தின் டயர்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட அவதானிப்புகளின் மூலம் தெரியவந்துள்ளதுடன், இந்தச் சம்பவத்திற்கான துல்லியமான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
எப்படியிருப்பினும், விமான ஓட்டிகளின் துரிதமான மற்றும் சரியான முடிவினால், விமானத்தில் பயணித்த அனைத்துப் பயணிகளும் மற்றும் விமானக் குழுவினரும் எந்தவித காயமுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு தற்போது விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.



