News
டாலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மேலும் வீழ்ச்சி: இன்று ஒரு டாலரின் மதிப்பு ரூ. 337.13 ஆக அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கியின் புதிய பரிமாற்ற வீத தரவுகளின்படி, அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று (29) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதற்கமைய, அமெரிக்க டாலர் ஒன்றின் விற்பனை விலை 337.13 ரூபாவாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்றைய தினம் 327.99 ரூபாவாக பதிவாகியிருந்த வாங்குதல் விலை 328.02 ரூபாவாக சற்று அதிகரித்துள்ளதுடன், விற்பனை விலை 337.00 ரூபாவிலிருந்து 337.13 ரூபாவாக உயர்ந்துள்ளது.
இது தவிர, வளைகுடா பிராந்திய நாணயங்கள் உட்பட மேலும் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பில் சிறிய மாற்றங்கள் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள பரிமாற்ற வீத அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



