News

நாட்டின் சட்டத்திற்குப் புறம்பான கோரிக்கைகளை யாரும் முன்வைக்க வேண்டாம் ; ஞானசார தேரரின் பொது மன்னிப்பு தொடர்பில் அமைச்சர் லால் காந்தவின் அறிவிப்பு

ஞானசார தேரரின் பொது மன்னிப்பு தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் வெளியிட்டிருக்கும் கடிதத்தை முதலில் அனைவரும் நன்றாகப் வாசிக்க வேண்டும். ஊடகவியலாளர்களும் நன்றாகப் வாசித்து புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அக்கடிதம் அனுப்பப்படும்போதே – அவர்கள் தலையிட்டுள்ளார்கள் என்பதே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என விவசாய அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.



ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்துரையாற்றிய அவர்,



மகாநாயக்க தேரர்கள் தலையிட்டுள்ள போதிலும் நாட்டில் சட்டம் என்று ஒன்று இருக்கிறதே. சட்டத்தை தராதரங்களைப் பார்த்து எம்மால் நடைமுறைப்படுத்த முடியாது.



இந்த அரசாங்கத்திற்கு மக்கள் அளித்த ஆணை சட்டத்தை அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துவதற்காகவாகும். அதற்கமையவே நாட்டின் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.



நாட்டின் சட்டத்திற்குப் புறம்பான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டாம் என நாங்கள் மக்களிடமும் பல்வேறு தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கிறோம்.



பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்று நாங்களும் நீண்டகாலமாக விவாதித்தோம் பேசினோம் ஆர்ப்பாட்டம் செய்தோம்.



நீண்டகாலமாக இந்நாட்டு மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் அதற்காகத் தலையிட்டுள்ளார்கள். தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பில் மக்களுக்குக் கருத்துத் தெரிவிக்க முடியும்.



எனவே ஒரு ஜனநாயக நாடு என்ற ரீதியில் எதிர்ப்புகளைத் தெரிவிக்கலாம் மனுக்களைச் சமர்ப்பிக்கலாம் அது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தலாம்.



இறுதியாக அவை அனைத்தையும் கவனத்தில் கொண்டே நாடாளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்படும் என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button