News

2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மேலும் வரி குறைப்புகள் மேற்கொள்ளப்படும் ; ஜனாதிபதி

2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மேலும் வரி குறைப்புகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரச வருமான இலக்குகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், வரவிருக்கும் 2027 வரவு செலவுத் திட்டத்தில் சில வரிகள் மேலும் குறைக்கப்படும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
தம்முடைய அரசாங்கம் பதவியேற்றது முதல் புதிய வரிகள் எதையும் அறிமுகப்படுத்தவில்லை என்றும், ஏற்கனவே அமலில் உள்ள பல வரிகளைக் குறைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முந்தைய ஆண்டுகளில் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் பெரும்பாலும் கிடைக்காமல் போன நிலைக்கு மாறாக, தற்போது அரசாங்கம் தனது வருமான இலக்குகளையும் தாண்டி சாதனை படைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வரும் நவம்பர் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button