News
மறியலில் இருக்கும் அனைவருக்கும் உணவைப் பகிர்ந்து கொடுத்த பிறகே நாமல் சாப்பிடுவார் ; சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் உணவு மற்றும் அவருடன் ஒரே வார்டில் தங்கியிருக்கும் ஏனைய கைதிகள் குறித்து சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம கருத்து தெரிவித்துள்ளார்.
“நாமலின் மனைவி லினியும் குடும்பத்தினரும் நாமலுக்கு சாப்பாடு கொண்டு வருகிறார்கள்.
நான் நாமலைப் பார்க்கச் செல்லும்போது அதைப் பார்க்கிறேன். நாமலுக்கு மட்டுமல்ல, அந்த வார்டில் உள்ள அனைவருக்குமே அவர்கள் உணவு வழங்குகிறார்கள்.
நாமலுக்கு அந்தளவுக்கு சாப்பாடு கிடைக்கிறது.
அவர் அனைவருக்கும் உணவைப் பகிர்ந்து கொடுத்த பிறகே சாப்பிடுகிறார்.
நாமலின் மீது சிறை அதிகாரிகளும் கைதிகளும் மிகுந்த அன்பாக இருக்கிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.


