News
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் பிணையில் விடுதலையான நாமல், மற்ற வழக்குகளில் பிணை கிடைக்காத காரணத்தினால், தொடர்ந்து விளக்கமறியலியலில்

கொழும்பு போர்ட் ட்ரான்ஸ்வொர்க்ஸ் சதுக்க நிலத்தை, ‘கிரிஷ்’ (Krrish) நிறுவனத்திற்கு பலநோக்கு அபிவிருத்தி திட்டத்திற்காக வழங்குவதற்கு வசதி செய்து கொடுத்து, 100 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலேயே நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
கிரிஷ் பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கின் பிணை மனு மீது கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (03) தீர்ப்பு வழங்கியது. இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், அவருக்கு வெளிநாடு செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள வேறு வழக்குகளில் பிணை கிடைக்காத காரணத்தினால், அவர் தொடர்ந்து விளக்கமறியலிலேயே வைக்கப்படவுள்ளார்.



