News

TIN இலக்கம் இல்லாதவர்களும் வங்கிக் கணக்குகளைத் திறக்கவும் வாகன வருமான உரிமங்களைப் புதுப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

டின் (TIN) இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெரிசலைக் குறைக்கும் நோக்கில், டின் இலக்கம் இல்லாதவர்களும் வங்கிக் கணக்குகளைத் திறக்கவும் வாகன வருமான உரிமங்களைப் புதுப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



இதற்காக தேசிய அடையாள அட்டை, தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விபரங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் குறித்த சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.



அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button