News
LIOC மற்றும் சினோபெக் நிறுவனங்கள் ஒக்டேன் 95 பெட்ரோல் விலையை ரூ. 20 ஆல் அதிகரித்துள்ளன: புதிய விலை ரூ. 515

இலங்கை இந்தியன் ஆயில் நிறுவனம் (LIOC) மற்றும் சினோபெக் (Sinopec) ஆகிய நிறுவனங்கள் ஒக்டேன் 95 பெட்ரோல் ஒரு லிட்டரின் விலையை 20 ரூபாவினால் அதிகரித்துள்ளன.
இதற்கமைய, இன்று (நவம்பர் 04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இதுவரை 495 ரூபாவாகக் காணப்பட்ட ஒக்டேன் 95 பெட்ரோல் ஒரு லிட்டரின் புதிய விலை 515 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



