News

மீன்பிடிப் படகிலிருந்து  3 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது – 5 பேர் கைது

கடற்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து நடத்திய சோதனையில், தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகில் இருந்து 150 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் தொகுதி மீட்கப்பட்டுள்ளது.



இன்று (05) காலை குறித்த மீன்பிடிப் படகு கடற்படையினரால் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், அங்கு 10 பொதிகளில் இருந்த போதைப்பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.



பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவும் இன்று காலை திக்கோவிட்ட துறைமுகத்திற்கு நேரில் சென்றிருந்ததுடன், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் குறித்த போதைப்பொருள் தொகுதியில் 100 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 50 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் இருந்ததாகக் குறிப்பிட்டார்.



அந்த போதைப்பொருள் தொகுதியின் சந்தைப் பெறுமதி  3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என பிரதி அமைச்சர் இங்கு தெரிவித்தார்.



விசேட கடற்படை நடவடிக்கையின் போது போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளில் கடத்திச் சென்ற உள்நாட்டு நெடுநாள் மீன்பிடிப் படகொன்று இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் வைத்து நேற்று (04) கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டது.



இதன்போது 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களும் இன்று காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.


Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button