News
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உலக சந்தையில் எண்ணெய் விலை 8% க்கும் அதிகமான வீழ்ச்சி

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன.
இதற்கமைய, கச்சா எண்ணெய் விலை 8% க்கும் அதிகமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அமெரிக்க டொலர் 95 ஐ விடக் குறைவான நிலைக்கு வந்துள்ளது.
அத்துடன், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் டொலர் 89 ஐ விடக் குறைவான மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.



