News

பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த அகமது லெப்பே முகம்மது அஸ்லம் என்ற நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை

பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொல்லை அளித்ததாக வரப்பெற்ற பல புகார்கள் தொடர்பில் தேடப்பட்டு வரும் 47 வயதுடைய சந்தேகநபரை நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

கல்முனை சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த அகமது லெப்பே முகம்மது அஸ்லம் என்ற நபரை கைது செய்வதற்காகவே சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


குறித்த சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளதாகவும், அவர் இருக்கும் இடம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர் இலக்கம் 478/A1, அலீம் வீதி, சாய்ந்தமருது 16 எனும் முகவரியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இவர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாகக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி: 071-8591162
சம்மாந்துறை பொலிஸ் நிலையம்: 067-2260222

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button