News

சட்டமா அதிபரிடமிருந்து அறிவுறுத்தல்கள் கிடைக்கும் வரை சந்தேகநபரை (முகம்மத் அஸ்லம்) கைது செய்ய வேண்டாம் என உத்தரவு


2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 05 ஆம் திகதியன்று, சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடி ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு தொடர்பாக பின்வரும் விளக்கம் அளிக்கப்படுகிறது.


அம்பாறைப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர், சந்தேகநபரை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி குறித்த சந்தேகநபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்கொணர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக இன்றைய தினம் (05.11.2026) பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.


மேலும், இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபரிடமிருந்து அறிவுறுத்தல்கள் கிடைக்கும் வரை சந்தேகநபரை கைது செய்ய வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்தச் சூழலைக் கருத்திற்கொண்டு, சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் முந்தைய அறிவிப்பை ஊடக நிறுவனங்கள் தொடர்ந்து வெளியிடுவதையோ அல்லது ஒலிபரப்புவதையோ தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


அத்துடன், இந்த விளக்க அறிவிப்புக்கு மூல அறிவிப்பிற்கு வழங்கப்பட்ட அதே ஊடக முக்கியத்துவத்தை வழங்குமாறும் பொலிஸ் ஊடகப் பிரிவு அனைத்து ஊடக நிறுவனங்களையும் கேட்டுக்கொள்கிறது.


பொலிஸ் ஊடகப் பிரிவு

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button