சினோபெக் (Sinopec) எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தியது.. மக்களிடம் மன்னிப்புக் கோரி பதாகைகள் வைப்பு

இலங்கை சில்லறை எரிபொருள் சந்தையில் தீவிரமாகச் செயற்படும் முன்னணி சீன நிறுவனமான ‘சினோபெக்’ நிறுவனம், தனது அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் நாளாந்த எரிபொருள் விநியோகத்தை வரம்புக்குட்படுத்தியுள்ளது (கட்டுப்படுத்தியுள்ளது).
நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த எரிபொருள் வெட்டு காரணமாக, தீவு முழுவதும் உள்ள பல சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையங்களில், குறிப்பாய் ஆக்டேன் 95 (Octane 95) பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், எரிபொருள் பெற வரும் நுகர்வோர் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள நாட்டின் பல பகுதிகளில் உள்ள சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலைய வளாகங்களில் சிவப்பு நிறத்திலான சிறப்பு அறிவிப்புப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. “சினோபெக் நிறுவனம் தங்களது அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் வழங்கும் எரிபொருளைக் குறைத்துள்ளதால், எரிபொருள் பெற வருகை தரும் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு வருந்துகிறோம்” என்று அந்த நிரப்பு நிலைய நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் விநியோக முனையத்திலிருந்து கிடைக்கும் எரிபொருள் தொகைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதால், நாளாந்தம் கோரப்படும் எரிபொருள் தொகைகள் கிடைக்காமல் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயற்பாடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.



