News

தனிநபர் ஒருவரின் குறைந்தபட்ச மாதாந்திரச் செலவு ரூ. 17,742 ஆக உயர்வு

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட செப்டம்பர் மாதத்திற்கான உத்தியோகபூர்வ தேசிய வறுமைக் கோட்டின்படி, தனிநபர் ஒருவரின் குறைந்தபட்ச மாதாந்திரச் செலவு 17,742 ரூபாவாக அதிகரித்துள்ளது.

வறுமைக் கோடு என்பது ஒவ்வொரு தனிநபரும் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான குறைந்தபட்ச செலவாகும்.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தின் குறைந்தபட்ச மாதாந்திரச் செலவு ரூ. 19,037 ஆகவும், களுத்துறை மாவட்டத்தின் செலவு ரூ. 18,624 ஆகவும் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், மிகக் குறைந்த வறுமைக் கோடு மொனராகலை மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன், அது ரூ. 16,965 ஆகும்.

Recent Articles

Back to top button