News

ஜோர்தான் அம்மான் நகரில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு தாக்குதல்

நேற்று மதியம் ஜோர்தான் நாட்டின் அம்மான் (Amman) நகரில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் முன்பு கூர்மையான ஆயுதம் ஒன்றைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில், அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த அந்நாட்டுப் பாதுகாப்புப் படை உறுப்பினர் கோப்ரல் ஜவாத் அலி கலஃப் அல் சலைட்டா (Corporal Jawad Ali Khalaf Al-Salaita) உயிரிழந்தார்.

ஜோர்தான் அதிகாரிகள் இச்சம்பவத்தை ஒரு பயங்கரவாதச் செயலாகக் கருதுகின்றனர். மேலும் இது குறித்து மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அச்சமயத்தில் இச்சம்பவத்தைத் தடுத்து நிறுத்த வந்த காவல்துறை ரோந்துப் படையின் (Police Patrol) தலைவரின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் காவல்துறையின் காவலில் உள்ளார்.

Recent Articles

Back to top button