News

இன்று காலை பலரையும் பலிகொண்ட A9 கோர விபத்து தொடர்பான மேலதிக விபரங்கள் 🔹🔹

கண்டி – யாழ்ப்பாணம் (A-09) பிரதான வீதியில், மிகின்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்பேவ வெலி ஓயா சந்திக்கருகில் இன்று காலை இடம்பெற்ற மூன்று பேருந்துகள் மோதிய விபத்தில் நால்வர் உயிரிழந்ததுடன் 76 பேர் காயமடைந்துள்ளனர்.
.
ஜனகபுரவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான (SLTB) பேருந்தும், அக்கரப்பற்றையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மற்றுமொரு SLTB பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
.
அதனைத் தொடர்ந்து, வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்று, கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த SLTB பேருந்தின் பின்புறத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
.
உயிரிழந்தவர்களில் ஒரு SLTB பேருந்து ஓட்டுநரும் மூன்று பயணிகளும் அடங்குவர். எட்டவீரகொல்லாவ மற்றும் ரீடிகமவைச் சேர்ந்த 47 மற்றும் 56 வயதுடைய இரு ஆண்களும், பதவியா மற்றும் வேயங்கொடையைச் சேர்ந்த 32 மற்றும் 72 வயதுடைய இரு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
.
காயமடைந்தவர்களில் 61 பயணிகள் (44 ஆண்கள், 14 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள்) அனுராதபுரம் வைத்தியசாலையிலும், 12 பயணிகள் (6 ஆண்கள் மற்றும் 6 பெண்கள்) மதவாச்சி வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
.
மேலும் 3 பெண்கள் மிகின்தலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மிகின்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button