மடவளை சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் தனது 23ஆவது வயதில் Chartered Accountant ஆன Mohamed Nawaf

மடவளை சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், தனது 23ஆவது வயதில் Chartered Accountant (ACA) தகுதியைப் பெற்று சாதனை படைத்துள்ளார் நவாப்.
நவாபின் கல்விப் பயணம் மிகவும் ஊக்கமளிக்கக்கூடிய ஒன்றாகும். தனது 4ஆம் தரத்தில் கல்வியைத் தொடர்வதற்காக மஹியங்கனையில் வசித்த தனது பெற்றோரைப் பிரிந்து மடவளைக்கு வந்து Boarding தங்கியிருந்து கல்வியைத் தொடர்ந்தார்.
மடவளையில் அமைந்துள்ள Hill Country International School இல் தனது கல்வியைத் தொடர்ந்து, சாதாரண தரப் (O/L) பரீட்சை வரை அங்கேயே கல்வி கற்றார்.
O/L பரீட்சைக்குப் பின்னர் AAT (Association of Accounting Technicians of Sri Lanka) கற்கைநெறியைத் தொடர்ந்த அவர், அதன் மூன்றாம் கட்டத்தில் சிறப்பான பெறுபேற்றைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று (All Island 1st – Third Stage Merit Prize Winner) என்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, உயர்தரக் கல்விக்காக (A/L) Dharul Hasanath Academy இல் இணைந்து, வர்த்தகப் பிரிவில் (Commerce Stream) 3 A சித்திகளைப் பெற்று சிறந்து விளங்கினார்.
கணக்கியல் மற்றும் நிதித்துறையில் கொண்ட ஆர்வத்தின் காரணமாக, அதன் பின்னர் Chartered Accountancy (CA) கற்கைநெறியைத் தனது அடுத்த இலக்காகக் கொண்டு பயணிக்கத் தொடங்கினார். பல வருடங்களாக அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்புடன் தனது தொழில்முறை கல்வியைத் தொடர்ந்து, தனது 23ஆவது வயதில் Associate Chartered Accountant (ACA) என்ற உயரிய தகுதியைப் பெற்றுள்ளார்.
கல்வியுடன் இணைந்த வகையில் தனது தொழில் வாழ்க்கையையும் கட்டியெழுப்பிய நவாப், வெளிநாட்டு நிறுவனங்களுக்கான External Audit மற்றும் சர்வதேச Finance Operations ஆகிய துறைகளில் அனுபவத்தைப் பெற்றுள்ளார். தற்போது அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சர்வதேச Aviation நிறுவனமொன்றின் கொழும்பு அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றார்.
தனது 4ஆம் தரம் முதல் O/L வரை மடவளையில் தங்கியிருந்து கல்வி கற்று, தற்போது தனது பெற்றோருடன் மடவளையிலேயே வசித்து வரும் நவாபின் இந்தச் சாதனை, மடவளை சமூகத்திற்கு ஒரு சிறப்பான பெருமையாக அமைந்துள்ளது.
ஒரு சிறிய வயதில் கல்விக்காக மடவளைக்கு வந்த மாணவர், இன்று தனது 23ஆவது வயதில் Chartered Accountant ஆக உயர்ந்திருப்பது அவரது விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் இலக்கை நோக்கிய பயணத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
மடவளை சமூகம் சார்பாக இந்தச் சாதனையைப் பெருமையுடன் கொண்டாடுவதுடன், இவரது வெற்றிப் பயணம் இப்பிரதேச இளம் தலைமுறையினருக்கும் தங்களது இலக்குகளை அடைவதற்கான சிறந்த முன்மாதிரியாக அமையட்டும்.
நவாபிற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும், எதிர்கால தொழில் வாழ்க்கையில் மேலும் பல உயரங்களை அடையவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்! ❤️



