உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பிக்குகள் உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் 🔹

அனுராதபுரம் வரலாற்றுப் புகழ்பெற்ற ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் மூன்று சிவில் பிரஜைகள் என மொத்தம் ஏழு பேர் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஏழு பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலிசாய தூபிக்கு அருகில் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் சிலர் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இதன்போது குறித்த இடத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்குகள் மற்றும் சிவில் பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



