News

LAUGFS காஸ் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 1,775 ஆல் அதிகரிப்பு

LAUGFS காஸ் நிறுவனம் தனது 12.5 கிலோகிராம் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ. 1,775 ஆல் அதிகரித்துள்ளது.

இதன்படி, நள்ளிரவு (13) முதல் இதன் விலை ரூ. 4,965 இலிருந்து ரூ. 6,740 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலையை ரூ. 732 ஆல் நிறுவனம் அதிகரித்துள்ளது. இதன் விலை ரூ. 1,988 இலிருந்து ரூ. 2,720 ஆக உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு ஆகும் செலவு அதிகரித்துள்ளமையினாலேயே இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக LAUGFS காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Recent Articles

Back to top button