News

பாரிய அளவிலான போதைப் பொருட்களுடன் 5 பேர் கைது 🔹🔹

பாரிய அளவிலான போதைப் பொருட்களுடன் 5 பேர் கைது 🔹🔹

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சுமார் 101 கிலோகிராம் 870 கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற ஆறு (06) மூட்டைகளுடன் கூடிய உள்நாட்டு பலநாள் மீன்பிடிப் படகொன்றைக் கைப்பற்றியதுடன், ஐந்து (05) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.

தெற்கு கடலில் பிடிப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகில் போதைப்பொருள் தொகையுடன் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளுக்காக இன்று ( 13.11.2026) காலை காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.குறித்த படகில் சுமார் 101 கிலோகிராம் 870 கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் ஆறு (06) மூட்டைகள் ஐந்து (05) சந்தேக நபர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் நிபுணத்துவ உதவியுடன், குறித்த போதைப்பொருள் தொகை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனைகளின்போது, 52 பொதிகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 58 கிலோகிராம் 736 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 50 பொதிகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 43 கிலோகிராம் 134 கிராம் ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த போதைப்பொருள் தொகையின் பெறுமதி 1.5 பில்லியன் ரூபாய்க்கும் (150 கோடி ரூபாய்) கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

குறித்த போதைப்பொருள் தொகையைப் பார்வையிடுவதற்காக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் எச்.என்.எஸ் பெரேரா மற்றும் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமிந்த கருணாசேன உள்ளிட்ட கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகளும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button