News

மீனவர்கள் ஒரு லட்சம் பேர் மீன்பிடி செயலியைப் பயன்படுத்துகிறார்கள்.. இதற்கு வரவு-செலவுத் திட்டத்தில் ஒரு பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது” – மீன்பிடி பிரதி அமைச்சர் ரத்ன கமகே

மீன்களைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியை (App) தற்போது சுமார் ஒரு லட்சம் மீனவர்கள் பயன்படுத்தி வருவதாக மீன்பிடி, நீர்ப்பாசன மற்றும் கடல் வளத்துறை பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

பிரதி அமைச்சர் நேற்று (13) நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போதே இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே,

“இப்போது இங்கு எதிர்க்கட்சியிலிருந்து செயலி எங்கே என்ற கருத்து எழுப்பப்பட்டது. செயலி உள்ளது. இந்த நாட்டில் மீன்களைக் கண்டறியும் செயலி உள்ளது. ஒரு இலட்சம் அளவிலான மீனவர்கள் அந்தச் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். அதைப் பயன்படுத்துகிறார்கள்.

தரவு, தகவல்களை அடிப்படையாகக் கொண்டு 2 – 3 நாட்கால எல்லையைக் கொண்ட ஒரு தரவுத்தளம் (Database) தான் அங்கு உள்ளது. இதை மேம்படுத்துவது குறித்து வெளிநாட்டு நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதை மேம்படுத்துவதற்காகத்தான் வரவு-செலவுத் திட்டத்தில் ஒரு பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக” தெரிவித்தார்.

Recent Articles

Back to top button