News

இலங்கைச் சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆணையாளராக சட்டத்தரணி ஃபாரிஸ் சாலி நியமனம் !

இலங்கைச் சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆணையாளராக சட்டத்தரணி ஃபாரிஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட சட்டத்தரணியான ஃபாரிஸ் சாலி இலங்கை ஜமாதே இஸ்லாமி அமைப்பின் செயலாளராக பதவி வகித்த வந்த நிலையில் அவர் இலங்கைச் சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அவரின் முகனூல் பதிவு …

1978 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க சட்ட உதவிச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இலங்கைச் சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆணையாளராக, ஆழ்ந்த கடமையுணர்வுடனும் எனக்கு முன்னர் பணியாற்றிய அனைவரையும் மதித்தும் பொறுப்பேற்கின்றேன்.

என்னை வரவேற்று நியமனக் கடிதத்தைக் கையளித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ ஹர்ஷண நாணயக்கார அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

2026 ஜூலை 15 ஆம் திகதி முன்னெடுப்பை மேற்கொண்ட சக ஆணையாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான பினர குணசேகர அவர்களின் பங்களிப்பையும், தலைவரினதும் ஆணையாளர்களினதும் பணிப்புரைக்கிணங்க பதில் செயலாளரால் 2026 நவம்பர் 5 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட உறுதிப்படுத்தலையும் நன்றியுடன் நினைவுகூர்கின்றேன்.

அமைச்சின் 2025 முன்னேற்ற அறிக்கையின்படி, ஒன்பது மாகாண அலுவலகங்களின் மேற்பார்வையில் 86 பிராந்திய சட்ட உதவி அலுவலகங்கள் இயங்குகின்றன. நிறுவன முன்னுரிமைகள் மற்றும் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” கொள்கையின் கீழ் எதிர்பார்க்கப்படும் நீதித்துறைச் சீர்திருத்தங்கள் குறித்த எமது கலந்துரையாடலைத் தொடர்ந்து, வறுமையும் பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலைகளும் நீதியை அணுகுவதற்குத் தடையாக அமையாதவாறு, சுயாதீனத்துடனும் நேர்மையுடனும் மனித கண்ணியத்தை மதித்தும் பணியாற்றும் எனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

Recent Articles

Back to top button