இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

இந்து சமுத்திரத்தின் Banda Sea பகுதியில் இன்று (17) அதிகாலை ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
.
இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில், இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
.
திணைக்களத்தின் தகவல்களின்படி, 2026 நவம்பர் 17ஆம் திகதி அதிகாலை 2.41 மணியளவில் 20 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
.
பண்டா கடல் பகுதியில் 6.16° தெற்கு அகலக்கோட்டிலும் 131.5° கிழக்கு நெடுங்கோட்டிலும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
.
சம்பந்தப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
.
இந்த நிலநடுக்கத்தின் விளைவாகத் தற்போது எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என இலங்கையின் கரையோரப் பகுதிகளை அண்டி வாழும் மக்களுக்குத் திணைக்களம் உறுதியளித்துள்ளது.



