News

நாட்டின் பொருளாதார மீட்சி, வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக சர்வதேச அபிவிருத்திக்கான IFAD நிதியத்திடமிருந்து 30 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

நாட்டின் பொருளாதார மீட்சி, வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக சர்வதேச அபிவிருத்திக்கான IFAD நிதியத்திடமிருந்து 30 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



பொருளாதார உறுதிப்பாட்டை மீண்டும் கட்டியெழுப்புதல், அரச நிதி நிலைமையை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஆதரவாக இந்த நிதி வழங்கப்படவுள்ளது.



குறித்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கை அர்ப்பணிப்புகளை மதிப்பீடு செய்த பின்னர், 30 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்க IFAD இணக்கம் தெரிவித்துள்ளது.



இதில் பொதுவான மூலதன வளங்களின் கீழ் 24 மில்லியன் டொலர்களும், விசேட மூலதன வளங்களின் கீழ் 6 மில்லியன் டொலர்களும் வழங்கப்படவுள்ளன. உலக வங்கியின் அபிவிருத்திக் கொள்கை நடவடிக்கையின் கீழ் வழங்கப்படும் நிதிக்கு இணையாக இந்தக் கடனுதவி வழங்கப்படவுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button