வெறும் 52 பந்துகளில் 200 அடித்து சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி

இந்திய கிரிக்கெட்டின் இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷி, பட்டியல் ஏ (List A) ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்.
கட்டாரின் தொஹாவில் இன்று (24) நடைபெற்ற ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் வீரர்களுக்கான தொடரில் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணிக்காக விளையாடிய அவர், 28 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்து இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
15 வயதான வைபவ், 16 பந்துகளில் அரைச்சதத்தைக் கடந்ததுடன், தனது அதிரடியான துடுப்பாட்டத்தின் மூலம் 28 பந்துகளில் சதம் கடந்து, 52 பந்துகளில் இரட்டை சதமடித்து எதிரணியின் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார்.
இதன்மூலம், அவுஸ்திரேலிய வீரர் ஜேக் பிரேசர் மெக்குர்க் 29 பந்துகளில் சதமடித்து இதுவரை தக்கவைத்திருந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
இதற்கு முன்னர் தென்னாபிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் 31 பந்துகளில் சதமடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தப் போட்டியில் இந்திய ஏ அணி வெறும் 5 ஓவர்களில் 100 ஓட்டங்களைக் கடந்து, பட்டியல் ஏ ஒருநாள் கிரிக்கெட்டில் அணியாக அதிவேகமாக 100 ஓட்டங்களைக் கடந்த சாதனையையும் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



