ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி இன்று (28) பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து மீது மலைப்பாறை ஒன்று உருண்டு விழுந்ததில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி இன்று (28) பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து மீது மலைப்பாறை ஒன்று உருண்டு விழுந்ததில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
.
கினிகத்தேனை, கலுகல பொலிஸ் காவலரணுக்கு அருகில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
.
மலையின் மேலிருந்து உருண்டு வந்த பாறை பேருந்தின் மீது விழுந்து, உள்ளே அமர்ந்திருந்த பயணியின் மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். காயமடைந்த பயணி கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
.
இந்த பாறைச் சரிவினால் பேருந்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
.
அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக மலைப்பகுதியிலிருந்த பாறை உருண்டு விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
.
உயிரிழந்தவர் அக்கரப்பத்தனை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



