மடவளை கொடுவேகெதர விளையாட்டுக் கழக ஏற்பாட்டில் இம்முறையும் இடம்பெற உள்ள மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி
அஸ்ஸலாமு அலைக்கும்!
அன்பின் ஜமாத்தினருக்கு…
சென்ற வருடத்தை போன்று இம்முறையும் கொடுவேகெதர விளையாட்டுக் கழகம் மற்றும் கொடுவேகெதர நலன்புரிச் சங்கம் ஆகியன இணைந்து எமது மஹல்லாவைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் மாணவ மாணவிகளை இனங்கண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.
இதற்காக வேண்டி சென்ற முறை ஒரு கிரிகெட் சுற்றுப்போட்டியை ஏற்பாடு செய்து அதன் மூலம் பெறப்பட்ட நிதியை கொண்டு இச் செயல்திட்டத்தை மேற்கொண்டோம். அதற்கான உதவிகளை தந்துதவிய அனைவருக்கும் முதற்கண் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
(ஜஸாக்கல்லாஹ் ஹைரா )
அதே போன்று இம்முறையும் மாபெரும் கிரிகெட் சுற்றுப்போட்டி ஒன்றை ஏற்பாடு செய்து அதன் மூலம் பெறப்படும் நிதி உதவிகளைக் கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்க தீர்மானித்துள்ளோம்.
எனவே இதற்காக வேண்டி உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும், உதவிகளையும் எமது நலன்புரிச் சங்கத்திற்கு தந்துதவுமாறு மிக வினயமாகவும் அன்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு.
கொடுவேகெதர விளையாட்டுக் கழகம் மற்றும் கொடுவேகெதர நலன்புரிச் சங்கம்…