News

மக்களின் விவசாய காணிகளுக்குள் பிக்கு ஒருவர் அட்டகாசம்

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள் நிலம் என பிக்கு ஒருவர் கூறி வருவதால் அப்பகுதி மக்கள் பாரிய இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.

புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியிலாவது இதற்கு உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருகோணமலை திரியாய்க் கிராமத்தின் பூர்விக வயல் நிலங்களில் முக்கிய வயல் வெளிகளான வளத்தாமரை, ஆதிக்காடு, ஒட்டுப்புல்மோட்டை, நீராவிக்கண்டல் மற்றும் வேடன்குளம் என உள்ளடக்கிய வயல் வெளிகளில் மக்கள் பரம்பரை பரம்பரையாக வயற்செய்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் புல்மோட்டை அரிசிமலைப் பிக்கிவினால் அடாவடியாக கையகப்படுத்தப்பட்ட 88 ஏக்கர்  பொதுமக்களின் உறுதிக் காணியில் விவசாயம் மேற்கொள்ள பாரிய சிரமத்தை மக்கள் எதிர்கொள்கின்றனர்.

வருடா வருடம் பெரும் போக வயற்செய்கையின் போதும் இவவிதமான நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்வதும் பின் பிக்குவின் அடாவடியினால் பயந்து இருப்பதுமான அவல நிலையில் மக்கள் இருக்கின்றனர்.

நீதிமன்றினால் மக்களிடம் காணிகளை கையப்படுத்தக் கோரியும் பிக்கு அடாவடியான முறையில் இச் செய்யற்பாட்டை முன் எடுப்பது குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button