ஈஸ்டர் அறிக்கையை கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு எடுத்து வர ஜனாதிபதி மறந்தது ஏன்?
ஈஸ்டர் அறிக்கையை கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு எடுத்து வர ஜனாதிபதி மறந்தது ஏன்? என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற பிவிதுரு ஹெல உறுமய ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு செல்லும் போது ஈஸ்டர் அறிக்கையை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். ஏன் எடுக்க மறந்தார் என்று தெரியவில்லை.
செனல் 4 ஆவணப்படம் பற்றி ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.அந்த அறிக்கையை ரனில் விக்ரமசிங்க வெளிப்படுத்தவில்லை. தற்போது மாயமாகியுள்ளதாக கூறுகின்றார்கள். சட்டமா அதிபரிடம் அதன் நகல் உள்ளது . அனுர குமார திஸாநாயகவுக்கு சட்டமா அதிபரிடம் அதன் பிரதியை பெற்றுக்கொள்ள முடியும் . அந்த அறிக்கையில் உள்ள விடயங்களை அவர் வெளிப்படுத்த வேண்டும்.
மக்களுக்கு தீர்வு கொடுக்க வேண்டும். சும்மாவாக மக்களுக்கு கையசைத்து செல்வதில் பலன் இல்லை.உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பணம் செலவழித்தே அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பதில் அதில் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். அதனை மக்களும் அறிய விரும்புகிறார்கள்.
எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்று மேடையில் சொன்னபோது அவர்களுக்கு பொருளாதாரம் தெரியாது. அல்லது பொய் சொல்லியிருப்பார்கள். அத்தகைய எரிபொருளின் விலையை வரிகள் விதிப்பதன் மூலம் குறைக்க முடியாது.
நாங்கள் இம்முறை நட்சத்திரப் பதக்கத்திற்காகப் போட்டியிடவில்லை, வெள்ளிப் பதக்கத்திற்காகப் போட்டியிடுகிறோம்.
சஜித் கூறுவது போல் நாங்கள் பிரதமர் பதவியை பெற முயற்சிக்கவில்லை. ஆட்சிக்கு வந்த அரசு தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.