News
குடும்ப தகராறு முற்றி, கணவன் கொலை.. மனைவிக்கு பொலிஸார் வலை வீச்சு
குடும்ப தகராறு முற்றிய நிலையில் மனைவி உள்ளிட்ட சிலர், கணவனை வெட்டி படுகொலை செய்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் 42 வயதுடைய நபர் ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொரட்டுவ, ரதுகுருசாவத்த, லக்ஷபதிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்த மொரட்டுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் மனைவி, தனது சகோதரனை வீட்டுக்கு வரவழைத்ததாகவும், அவரின் உதவியுடன் இந்த கொலையை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.