நான் தற்காலிகமாக அரசியலில் இருந்து விலகுகிறேன் – நான் ஒரு அரசியல் அனாதை அல்ல.. நிரபராதியாக மீண்டும் அரசியலுக்கு வருவேன் ; கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவிப்பு
நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.
தாம் அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு பெறுவது குறித்து கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கும் வகையில் இன்று (13) கண்டி ராஜசிங்க மாவத்தையில் அமைந்துள்ள ஒக்ரே ஹோட்டலில் நடைபெற்ற கூட்டத்தில் ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் மூலம் தனக்கு நியாயம் கிடைக்கும் என உறுதியாக நம்புவதாகவும், அதேபோல் நிரபராதியாக மீண்டும் அரசியலுக்கு வருவேன் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
நான் ஒரு அரசியல் அனாதை அல்ல, பொதுமக்களின் அங்கீகாரம் அப்படியே இருக்கும் சூழ்நிலையில் அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு பெறுகிறேன் எனவும் தான் தொழிலதிபராக சம்பாதித்த பணத்தின் மதிப்பை விட அரசியலில் ஈடுபடும் மக்களின் அன்பு மதிப்பு வாய்ந்தது என மேலும் தெரிவித்துள்ளார்.
(எம்.ஏ.அமீனுல்லா)