ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான அறிக்கைகளை வெளியிட ஜனாதிபதிக்கு நான் வழங்கியுள்ள காலக்கெடு நாளை காலை 10 மணிக்கு முடிவடையும் ; மிரட்டும் கம்மன்பில

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடு நாளை (21) காலை 10.00 மணியுடன் முடிவடையும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கம்மன்பில கூறியதாவது, “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பகிரங்கப்படுத்தத் தயங்கும் இரண்டு அறிக்கைகளையும் வெளியிடுமாறு ஜனாதிபதிக்கு நான் வழங்கிய கால அவகாசம் காலை 10.00 மணியுடன் முடிவடைவதாகவும் அறிக்கைகளை வெளியிடுவதற்கும் அரசியலமைப்புப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கும் ஜனாதிபதிக்கு நாளை காலை வரை அவகாசம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
அவ்வாறு செய்யத் தவறினால் பதவி நீக்கம் செய்யப்படும் அபாயம் ஏற்படும் என கம்மன்பில எச்சரித்துள்ளார்.
அரசியலமைப்பின் 38வது சரத்தை ஜனாதிபதி மீறினால் மற்றும் நாளைய தினம் அறிக்கைகளை வெளியிடத் தவறினால், நான் நிச்சயமாக அவற்றை பகிரங்கப்படுத்துவேன்” என கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

