வேட்பாளரின் வெற்றிக்காக பொத்துவில் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல் வாளாகத்தில் துஆப் பிரார்த்தனை

அமான் அஸீஸின் வெற்றிக்காக பொத்துவில் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலில் துஆப் பிரார்த்தனை
(அஹமட்)
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பொத்துவில் தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் அமான் அஸீஸுக்கு பொத்துவில் பிரதேசத்தில் நேற்று (18)
வரவேற்பளிக்கப்பட்டு பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலில் விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த அமான் அஸீஸ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹும் எம்.பி.ஏ.அஸீஸின் புதல்வராவார். பாராளுமன்ற உறுப்பினர் அஸீஸ் பொத்துவில் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை செய்து அங்குள்ள மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் அவருடைய புதல்வரை களமிறங்குமாறு பொத்துவில் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்ததன் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அமான் அஸீஸுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்தில் 1 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் எனக்கு பொத்துவில் பிரதேசத்தில் அமோக வாக்குகள் கிடைக்கும் எனவும் எனது தந்தையின் மறைவிற்குப் பின்னர் பொத்துவில் பிரதேசத்தில் வாழும் மூவின மக்களுக்கும் பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்

